"இரவு 2 மணி வரை திரைப்படங்களை திரையிட அனுமதிக்க வேண்டும்"-திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முதலமைச்சரிடம் கோரிக்கை

0 1974

திரையரங்குகளில் திரைப்படங்கள் திரையிடப்படும் நேரத்தை இரவு 2 மணி வரை அதிகரிக்க வேண்டும் என்று தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் கூட்டாக முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

திரைப்பட டிக்கெட் கட்டணத்தில் சேர்க்கப்படும் 8 சதவீத local body tax-ஐ நீக்க வேண்டும், பெரிய கட்டடத்தில் ஒரு திரையுடன் இயங்கும் திரையரங்குகளில், 4 திரைகள் வரை விரிவுபடுத்த அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments